கச்சதீவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை ! இந்திய ஊடகங்களுக்கு அமைச்சர் பீரிஸ்!
இரு நாடுகளினதும் இணக்கப்பாட்டினூடாக, இலங்கைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கச்சதீவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லையென, வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய ஊடகங் களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட பூரண இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதன் உரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தேவையற்றதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை கடலில் அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தினமும் இலங்கை கடற்பரப்பில் 500 ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதனால் இலங்கை மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இவ்வாறு அத்துமீறிய இந்திய மீனவர் களில் 100 பேர் அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப் பட்டனர் என தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சலுகைகள் வழங்கப்படமாட்டாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
முன்னாள் நடிகை ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களை பேய்காட்டுவதற்காக சொன்தே கச்சதீவு.
Post a Comment