Tuesday, August 6, 2013

ஒலி பெருக்கி பாவனைக்கு வவுனியாவில் புதிய கட்டுப்பாடு

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனவே இவ்விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன எனவே பொதுப் பரீட்சைகளான புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடிய கவனமெடுத்து தமது வழிபாட்டு தலங்களில் ஒலிக்க விடப்படும் ஒலிபொருக்கிகளின் ஓசையை உட் பிரகாரத்தினுள் மாத்திரம் ஒலிக்க விடுமாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment