முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மகன் சிம் மேசடியில்!
மொகமட் சியாம் கொலை வழக்கின் 8ஆவது சந்தேகநப ரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர் தனவின் மகனான ரவிந்து குணவர்த்தனவிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம் காட்டை ஆராய்ந்தபோது அது மோசடியான வகையில் பெற்றப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவானிடம் தெரிவித்தனர்.
இந்த சிம்காட் ஏ.கே.எம்.அப்புகாமி என்பருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனம் தெரிவித்தது. இதனால் அப்புகாமியை தேடிப்பிடித்து விசாரித்தபோது அவர் தனக்கு இந்த சிம் காட் பற்றி எதுவும் தெரியாது என கூறியதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தை மேலும் விசாரித்து வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டனர். கொழும்பு பல்கலைக்கழகம், ரவிந்துவின் கணனி, பல்லூடக அட்டை என்பவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டதுடன் சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment