இந்திய மக்கள் பால் மா பாவனை செய்வதில்லை மில்க் பவுடர் என்றால் அவர்களுக்கு என்னவென்றே தெரியாது என ராவண பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் பால் மா பயன்படுத்துகின்றனர். ஆனால் அயல் நாடான இந்தியா பால் மா இறக்குமதிகூட செய்வதில்லை என மஹரகமவில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
13வது திருத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட முடியாது அவ்வாறு வழங்கினால் அது எருமை மாட்டுக்கு கொம்பு வழங்குவதற்கு சமனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பிரதிபலன்களை பின்னர் அனுபவிக்க நேரிடும் என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் கூறியுள்ளார்.
மேலும், சில அடிப்படைவாதிகள் பௌத்தர்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மாடறுப்பை நாட்டில் தடை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தமக்கு தெரியும் என இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment