நாடுகடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் கைது
சர்வதேச பிடிவிராந்து பிடிக்கப்பட்டிருந்த புலிகளின் முன்னாள் உறுப்பினரான 35 வயதான தேவா சதீஸ்குமார் இந்தியா மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது
அவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இவரை கைது செய்து விசாரணையின் போது தான் வானூர்தி மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்ததாக அவர் தெரிவித்தார் எனினும் அவர் மீதான விசாரணையை துரிதப்படுத்திய போதும், அவர் படகு மூலமே இந்தியா சென்றிருந்தமை தெரிய வந்ததைத் தொடர்ந்தே அவர் நாடு கடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment