யாழ் பல்கலைக் கழக நுண்கலைப் பீட கலைவட்டத்தின் ஏற்பாட்டில் கலைக் கண்காட்சி
யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீட கலைவட்டத்தின் ஏற்பாட்டில் கலைஞர் ஹனா ஹோல்மனின் ‘பின்னல்’(interlaced) எனும் கலைக்கண்காட்சி இன்று காலை(23.08.2013) 10.30 மணியளவில் ஆரம்பமானது.
இக்கண்காட்சியில் கலைஞரின் ஆழமாக பதிந்த அனுபவங்கள், உணர்ச்சிகள், என்பன ரேகைகளாகவும், பல்வேறுபட்டஅடுக்கு பின்னல் கோடுகளாலும், வரையப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ள கண்காட்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்து மங்கள விளக்கினை ஏற்றி வைத்தார்.
ஓவியங்களை வரைந்தவர்கள் தாம் சென்ற இடங்களில் தங்கள் சந்தித்த மக்கள், பண்பாடுகள் என்பவற்றை மையப்படுத்தி வரைந்துள்ளதுடன் இக்கண்காட்சியானது கலைக் கூடத்தில் 23 திகதியிலிருந்து 29 திகதிவரை யாலை 10 மணிமுதல் 4மணிவரை நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என அதிகளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment