Thursday, August 8, 2013

மதுவை ஒழிப்பீர்! மலையக மக்கள் தெருவில் இறங்கி போராட்டம்!

ஊவா மாகாணத்தில் தோட்டபுறங்களில் காணப்படும் சட்டவிரோத மது பாவனைனைகு;கெதிரான எதிர்ப்;பு ஆர்பாட்டமானது ஊவா மாகாண பெருந்தோட்டப்புற மக்களின் ஏற்பாட்டினால் தோட்ட இளைஞர் யுவதிகளுளின் பங்குபற்றலுடன் ஊவா மாகாண சபைக்கு முன்பாக இன்றைய தினம் 08.08.2013 நடைபெற்றது.

இதன் போது சட்ட விரோத மதுவினால் சீரழியும் எமது இளைஞர் சமூகத்தினை பாதுகாப்போம், தோட்டப்புற மக்களை நாசம் செய்யும் சட்டவிரோத மதுபாவனையை ஒழிப்போம், பெருந்தோட்டங்களில் மதுவை ஒழிக்க அனைவரும் ஒன்றினைவோம், கசிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம், என்ற பதாதைகளை தாங்கிய வண்ணமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடியை ஏந்திய வண்ணமும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள் பெருமளவில் ஈடுப்பட்டிருந்தனர். மாகாண சமூக நலன்புரி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் மக்களுடன் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவிற்கும், மாகாண ஆளுனர் நந்த மெதிவ் ஆகியோருக்கும் சட்டவிரோத மதுவிற்கெதிரான மகஜர்களை கையளித்தார்.

எஸ்.சிவகாந்தன்










No comments:

Post a Comment