அரச ஊழியர்கள் தனது கடமைகளை செய்ய தடைகள் ஏற்பட்டால், அதில் நாம் தலையிடுவோம்!
மோதல்களற்ற அமைதியான தேர்தலுக்காக பெப்ரல் அமைப்பு, விசேட தேர்தல் பிரிவொன்றை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் வடக்கில் விசேட முறைப்பாட்டு பிரிவொன்றை ஏற்படுத்த, நாம் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே, பல அலுவலகங்களை நாம் திறந்துள்ளோம். 5 மாவட்டங்களிலும் இதனை முறையாக முன்னெடுப்பதற்கு, நாம் தீர்மானித் துள்ளோம்.
எந்தவொரு அரச ஊழியருக்கும் தனது கடமைகளை நடுநிலையாக செய்வதற்கு தடைகள் ஏற்பட்டால், அதற்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கவும், அதில் தலையிடவும், நாம் திட்டமிட்டுள்ளோம்.
0 comments :
Post a Comment