Sunday, August 4, 2013

உள்ளாடைக்குள் மறைத்து வைர நகைகளை கடத்திய நகை மாளிகை உரிமையாளர் கைது


சிங்கப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வருகைதந்த பயணி ஒருவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது உள்ளாடைக்குள் 2½ கோடி ரூபா மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை கைது செய்து தீவிர விசாரணையை நடத்தியதில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இவர் சிங்கப்பூரில் உள்ள நகை மாளிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் விஹாரி போடார் என்பதுடன் இவருடைய கணவர் அபிஷேக் போடார் பிரபல ஜவுளி நிறுவனத்தின் அதிபர் எனத்தெரிய வந்துள்ளதடன் இவர் இதுபோன்று 10 தடவை வைரம் மற்றும் தங்க நகைகளை கடத்தி வந்த தகவலையும் விசாரணையின்போது அவர் வெளியிட்டார்.

விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில் நகைக்கடைகள் உள்ளன என்பதுடன் அந்த கடைகளுக்காக சிங்கப்பூரில் இருந்து நகைகளை கடத்தி வந்ததாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சாந்தாகுரூசில் உள்ள அவருடைய நகை கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டதுடன் அங்கு கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபா மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment