Saturday, August 31, 2013

பேஸ்புக் காதல், மாணவியை நிர்வாணமாக்கியது

பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த மாணவியொருவரைக் கடத்திச் சென்று அவரை பலவந்தமாக நிர்வாணப்படுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்த நபரொருவர் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் அவரைக் கைதுசெய்த பொலிஸார் அவரது கையடக்கத்தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து இது பேஸ்புக்கிலிருந்து ஆரம்பித்த காதல் தொடர்பு எனத் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் ஏற்கனவே திருமணமாணவரெனவும் அவருக்கு குழந்தை ஒன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com