நலலூர் கந்தன் கொடிச்சீலைக்கான காளாஞ்சி ஆலயத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது
யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன.
இதற்கமைவாக, இன்று(01.08.2013) வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.
நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது இந்த நிகழ்வு வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும்.
ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது அதாவது நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இவ்வருடம் முருகபெருமானின் திருவருள் கைகூடியதற்கமைவாக மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச்செல்லப்பட்டு ஆலய பிரதம குருவினால் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment