Monday, August 26, 2013

அமெரிக்கா தாக்கினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் தீப்பற்றி எரியும் - சிரியா எச்சரிக்கை!

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் சிரியாவைத்தாக்கும் நோக்குடன் படைகள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள், நீர் மூள்கிக்கப்பல்களை மத்திய தரைக்கடலை நேக்கி நகர்த்துகிறது.

இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் என சிரியா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று பேட்டியளித்த சிரியாவின் தகவல் அமைச்சர் ஒம்ரான் அல் ஜோபி கூறுகையில், ‘தற்போதைய நிலையில் எங்கள் நாட்டு பிரச்சினையில் யார் தலையிட்டாலும் அது தீயை வீசுவதற்கு ஒப்பானதாகும் அந்த தீ சிரியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்து விடும்.

சிரியா மீது தாக்குதல் நடத்திவிடலாம் என நினைப்பது அவ்வளவு சாதாரனமாக நடக்கக்கூடியது அல்ல’ என்று கூறியுள்ளார்.

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அபாயக் கோட்டை தாண்டும் நடவடிக்கையாகும் என ஈரானும் எச்சரித்துள்ளது.

அது மட்டுமல்லாது ஈரான் நாட்டின் ராணுவ துணைத் தலைவர் மசூத் ஜசாயெரி, ‘அபாயக் கோட்டை அமெரிக்கா தாண்டினால் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்க நேரிடும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்கள் மக்களிடம் இருந்து தப்பிவிட முடியாது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment