டிலானின் பௌத்த அமைப்புத்தான் 'பொதுநெ(த்)த.....?
இந்நாட்டில் செயற்படுகின்ற பௌத்த அமைப்பு எனச் சொல்கின்ற அமைப்புக்கள் பௌத்தக் குறிக்கோளிலிருந்து விலகியே செயற்படுகின்றன. இந்நிலைமையிலிருந்து விலகி, பண்டாரவலை நகரத்தை கேந்திர நிலையமாகக் கொண்டு 'பொது நெ(த்)த அமைப்பு செயற்பட்டு வருவதாக அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார். இவ்வமைப்பின் மூலம் நகரிலுள்ள அனைத்து விகாரைகளினதும் குறைபாடுகள் கண்டறியப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இது இவ்வாறிருக்க, இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்ற அவ்வமைப்பின் செயலாளர் சுசந்த கருணாரத்ன, தமது அமைப்புடன் டிலான் பெரேராவுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்கிறார்.
பொதுநெ(த்)த அமைப்பு பண்டாரவலையைக் கேந்திர நிலையமாகக் கொண்டு தற்போது செயற்பட்டுவருவதாகவும், இவ்வமைப்புடன் எந்தவொரு அரசியல்வாதிக்கும் தொடர்பு இல்லை எனவும், இது சுதந்திரமாக பௌத்த இளைஞர்களால் வழிநடாத்தப்பட்டுவரும் அமைப்பு என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment