Monday, August 26, 2013

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு வரும் ஊடகவியலாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகைத்தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளதுடன் மாநாட்டிற்கு வரும் ஊடகவியலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் கூறியுள்ளார்.

WWW.CHOGM2013.LK என்ற இணையத்தளத்தில் உள்ள நடைமுறைகளுக்கு அமைய சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தற்போது ஊடகவியலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் விசேட ஊடக மத்திய நிலையமொன்று இயங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ஊடகவியலாளர்களுக்காக விசேடமாக ஏழு ஹோட்டல்களை பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்குரிய ஏற்பாடுகளை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு, அமைச்சின் உபகுழு தலைமையில் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com