பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரருக்கு ஸ்ரீ சுமேதாராம விகாரை வளவிற்கு செல்வதற்கு தடை! - நீதிமன்றம்
பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரருக்கும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் வந்து ரம்ப கட்டம்புராவ ஸ்ரீ சுமேதாராம விகாரை வளவிற்கு செல்வதை தடை செய்யும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பத்தேகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் இத்தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீ சுமேதாராம விகாரையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த மக்களை ஒன்று திரட்டி குழப்பம் விளைவிப்பதற்கு இத்தேரர்கள் முயற்சித்ததை தொடர்ந்து வந்துரம்ப பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி பத்தேகம நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப பதில் நீதிபதியும் மாவட்ட நீதியரசருமான மாப்பலகம விமலரத்தன இத்தடை உத்தரவை பிறப்பித் துள்ளார்.
மக்களின் அமைதியை சீர்குலைக்க மேற்கொண்ட முயற்சியை தடுக்கும் நோக்கி லேயே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment