எச்சரிக்கை! கூகுள் உங்களை கண்காணிக்கிறதாம்!
உலகத்தில் இலவசம் என்று எதுவும் இல்லை பாதுகாப்பு, ரகசியம் என்றும் எதுவுமில்லை. சமீபத்தில் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் எட்வர்ட் ஸ்நோடன் என்பவரைப் பற்றி உலகில் உள்ள அனைத்து நாடுகளை உளவு பார்ப்பது மட்டுமல்லது தனி நபர் தகவல்களையும் திரட்டுகிறது அமெரிக்கா என்ற உண்மையை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தியவர்தான் இந்த ஸ்நோடன் இவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி தேடிவருகிறது அமெரிக்கா இவருக்கு அடைக்கலம் தரவேண்டாம் என்று உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமேரிக்கா.
கூகுள்,ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையதளங்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அமெரிக்காவிற்கு அளித்து வருகிறதாம். அரசாங்கங்கள் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக என்று சொல்லி எங்களிடமிருந்து தகவல்கள் கோருகின்றன. ஆனால் அது முற்றிலும் உண்மையா என்பதை நாங்கள் கண்டறிய இயலாது என்று கூறுகிறது கூகுள்.
பல்வேறு தேடு பொறிகள் இருந்தாலும் கூகுள்தான் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறது. அவ்வப்போது புதிய தேடுபொறிகள் முளைப்பதும் சிறது சிறிது காலத்திற்குள் காணாமல் போவதும் சகஜமே! அப்படி புதிதாக உருவான தேடு பொறி “டக் டக் கோ” (DuckDuckGo)
இணையத்தில் யாருடைய தகவல்களை சேகரிக்கவோ, உளவு பார்க்கவோ மாட்டோம் என்ற முழக்கமிடுகிறது ‘டக்டக் கோ’. இதனாலேயே இது சற்று பிரபலம் அடைந்துள்ளது.
இதற்கும் மேலாக கூகிள். எவ்வாறு இணையப் பயனாளர்களின் விவரங்களை சேகரிக்கிறது, என்பதை தெளிவான பட விளக்கங்களோடு விவரிக்கிறது.. அதனால் எந்த விவரமும் சேகரிக்காத, விளம்பரங்கள் இல்லாத எங்கள் DuckDuckGo) தேடு பொறியை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறது
கூகுள் எப்படி தகவல் திரட்டுகிறது என்று பார்ப்போமா?
உதாரணத்திற்கு Google இல் herpes என்று டைப் செய்து தேடுவதாகக்
கொள்வோம்.
தேடுதலின்போது ஒரு லிங்கை கிளிக் செய்ய
உங்கள் தகவல்கள் அந்ததளத்திற்கு உங்கள் தேடுதல் வார்த்தையோடு உங்கள் கணினி மற்றும் பிரவுசர் விவரங்களை கீழ்க் கண்டவாறு அனுப்பி வைக்கிறது.
இவ்விவரங்கள் மூலம் உங்களை எளிதாக கண்டறிந்து விடுகிறது.
இது போன்ற சில தளங்கள் விளம்பரங்களை உடையதாக இருக்கின்றன, இவை விளம்பரம் செய்வதோடு உங்களைப் பற்றிய புரொஃபைலையும் தயாரிக்கின்றன
இவ்வாறு சேகரிக்கப் படும் விவரங்கள் விற்கப்பட்டுவிடுகின்றன சில சமயங்களில் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் ரகசிய குறியீடுகளாக சில வார்த்தைகளை சமூக விரோதிகள் பயன் படுத்த அதை வேறு காரணத்திற்காக நாம் தேட சேமிக்கப் பட்ட இந்த தகவலால் நாம் விசாரணைக்கு உட்படுத்தப் படலாம்.
இது போன்று பல சிக்கல்கள் எழ வாய்ப்பு உண்டு, எனவே உங்கள் சொந்த தகவல்களை சேமிக்காத, யாருக்கும் விற்காத பாதுகாப்பான எங்கள் தேடுபொறியான DuckDuckGo வை பயன்படுத்துங்கள் என்று கூறுகிறது.
கூகுள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் டக்டக் கோ எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது போகப் போகத் தான் தெரியும் . உலகத்தில் எதுவும் இலவசமில்லை. சொல்லும் அளவுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.குறிப்பாக பெண்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.
0 comments :
Post a Comment