வெலிவேரிய சம்பவம் தொடர்பில் தான் உத்தரவிடாத கருத்துக்களை தான் உத்தரவிட்டதாக தெரிவித்து மக்களை தவறாக வழிநடத்தியது யாரென்பதனை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குதாறு கம்பஹா பிரதான நீதவான் அத்தனகல உதவி பொலிஸ் அதிகாரிக்கு உத்தர விட்டுள்ளார்.
வெலிவேரிய மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணை கம்பஹா பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
வெலிவேரிய மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய தொழிற் சாலைகளை மூடிவிடுமாறு தன்னிடம் கோரியதாகவும், அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் பொலிஸார் மக்கள் முன்னிலையில் தெரிவித்தமை யூ டியூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூ டியூப் சமூக வலைத்தளத்தை பார்வையிட்டு பத்திரிகைகளை பார்வையிட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறும் நீதவான் உதவி பொலிஸ் அதிகாரியிடம் கோரியுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment