Saturday, August 24, 2013

விதிகளை மீறிய பிரச்சாரம் மேற்கொண்டதாக விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு

வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ.ம.சு.முன்னணி முதன்மை வேட்பாளர் சி.தவராசா தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச சொத்துக்களை எவ்வகையிலும் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என்ற சட்டவிதிகளை மீறி தமது பிரசார கூட்டத்தினை அரச சொத்தான சாவகச்சேரி பிரதேசசபை மண்டபத்தில் அவர் கூட்டியிருந்ததாக புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் துரைராஜா மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களின் பங்களிப்புடன், சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கூட்டமைப்பின் வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன் ஆகியோரும், கட்சிப் பிரமுகர்களும் பங்கேற்றதுடன் வட மாகாணசபைத் தேர்தல் குறித்து இக்கலந்துரையாடலில் பரப்புரை நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment