வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு புதிய நிர்வாக சேவை அதிகாரிகள் நியமனம்! (படங்கள் இணைப்பு)
மக்களின் நலனுக்காக துணிவுடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளின் சார்பில், தான் எப்போதும் முன்நிற்பதாக, ஜனாதிபதி, அரசாங்க ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
30 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பு வதற்காக, அரசாங்கம் பாரிய திட்டங்களை அமுல்ப்படுத்தி வருவதாக, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் பலாப்பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக, காத்திரமான அரச சேவையொன்று, குறித்த மாகாணங்களில் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிர்வாக சேவையில் தமிழ் மொழி பரீட்சையில் சித்தியடைந்து, ஒரு வருட பயிற்சிக்காலத்தை பூர்த்தி செய்த 43 நிர்வாக சேவை அதிகாரிகளை வடக்கு கிழக்கில் உள்வாங்குவதற்கான நியமன கடிதங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வைபவம், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அரச சேவையில் இன, மத, பிரதேச, அரசியல் பாகுபாடு இருக்கக்கூடாதென, ஜனாதிபதி இங்கு உரையாற்றும்போது, தெரிவித்தார். அனைத்து மக்களுக்காகவும், சேவையாற் றுவது, அரச ஊழியர்களின் கடமையெனவும், அவர் கூறினார்.
0 comments :
Post a Comment