வாஸ்குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் 9 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ரவிந்து குணவர்தன மிரிஹானவில் ஆடம்பர வீடொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப் பட்டார்.
நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த புலனாய்வு பிரிவினர் வாஸ் குணவர்தன பயன்படுத்திய டெப் ரகத்தை சேர்ந்த கணினி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு நடவடி;கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அத்துடன் வாஸ் குணவர்தன பயன்படுத்திய 3 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் மொஹமட் சஹாப்தீன் இவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment