Tuesday, August 20, 2013

கோட்டாவின் போர்! சிங்கள மொழியாக்கம் வெளியானது.

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சி.ஏ சந்திர பிரேம என்பவர் கோட்டாவின் யுத்தம் என்ற நூலினை எழுதியிருந்தார். சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்த ஆங்கில நூலின் சிங்கள மொழியாக்கம் இன்று பெருவிழாவுடன் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை வோட்டர் சேஜில் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

நூலின் முதல் பிரதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்ததன் பின்னர் ஏனைய அதிதிகளுக்கும் வழங்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவின் யுத்த கால வாழ்க்கiயின் முதற்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தொழில்சார் இராணுவ படையை உருவாக்க பங்களிப்பு செய்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் 2ம் கட்டளை அதிகாரியாக இவர் பணியாற்றினார். 2005ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்ற கேட்டாபய ராஜபக்ஷ யுத்த வெற்றிக்காக பல அர்ப்பணிப்புக்களை செய்தார். இந்நூல் 600 பக்கங்களை கொண்டதாகும். இதற்கு பங்களிப்பு செய்த முக்கிய நபர்களின் புகைப்படங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மகா சங்கத்தினர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




1 comment: