நவநீதம்பிள்ளைக்கு செய்யக்கூடிய ஒரே ஒரு வேலை இருக்கின்றது - விளக்குகிறார் நிமல் சிறி்பால டி சில்வா
இலங்கை தொடர்பாக கண்டறிய, எவருக்கும் சந்தர்ப்பம் உண்டு. எமக்கு மூடி மறைப்பதற்கு எதுவும் இல்லை. கேட்பதே அன்றி, வருகை தந்து இரு கண்களால் கண்டுகொள்ள, எவருக்கும் நாம் அழைப்பு விடுப்போம். இவ்வகையிலேயே, நவநீதம் பிள்ளையும் இங்கு வருகை தந்துள்ளார். அவருக்கு எங்கும் செல்ல முடியும். எவரையும் சந்திக்கலாம். எதனையும் பார்க்கலாம் என, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவருக்கு சுதந்திரமாக சென்று தேவையான தகவல்களை திரட்டுவதற்கு, நாம் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். இதன்மூலம் அரசாங்கத்தின் நேர்மைத்தன்மை, வெளிப்படுத்தப்படுகிறது. அவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல், அவருக்கு தேவையானவர்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக் காமல் இருந்தால், அதற்கு அவர் தன்னால் உரிய முறையில் இவற்றை அவதானிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென கூறுவார். அவர் யாரை சந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தால், அவர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு, நாம் வாய்ப்பு வழங்குவோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு உத்தரiவு பிறப்பிக்க நவநீதம் பிள்ளைக்கு முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.
நவநீதம்பிள்ளைக்கு செய்யக்கூடிய ஒரு வேலை இருக்கின்றது. அது, அவரால் இங்கு வந்து விசாரணைகளை நடாத்தலாம். அரசாங்கத்திற்கு உத்தரவு வழங்க, எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. அவ்வாறான ஒருவர் வழங்கும் உத்தரவுகளை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்த்தால், சர்வதேச ரீதியில் எமது எதிரிகள் எமக்கு எதிராக சித்தரிக்கும் காட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சியையே அவரால் அவதானிக்க முடியுமென, நாம் நினைக்கின்றோம்.
0 comments :
Post a Comment