இலங்கைக்கு சொந்தமான பகுதி பற்றி, இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்துவதற்கு தடை - இந்திய வெளியுறவு அமைச்சு!
இலங்கை நட்பு நாடாக இருப்பதால், கச்சதீவு பற்றி, தொடர்ந்தும் பேசுவது, பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத் துமென, இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித் துள்ளது.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே இராமேஸ் வரம் கடற்பகுதியில் அமைந்துள்ள கச்சதீவு 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது.
கச்சதீவு விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடாத்த வேண்டுமென, திமுக எம்.பி. இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. லிங்கம் ஆகியோர், சபாநாயகரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர். எதிர்வரும் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இது குறித்து விவாதம் நடாத்த வேண்டுமென, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க, இந்திய வெளியுறவு துறை அமைச்சின் இணை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா, இந்திய பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைகள் எவை என்பது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டு விட்டது. இந்தியா தனது கடல் எல்லையில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு நாடுகளினதும் இணக்கத்தின் அடிப்படையிலேயே, எல்லைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டபோது, கச்சதீவு இலங்கை கடற்பரப்பிற்குள் அமைந்து விட்டது.
ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி. இவ்விடயம் முடிந்து போன ஒன்று. அதை திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது. இலங்கை, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. ஆகவே, கச்சதீவு குறித்து இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அவ்வாறு விவாதம் செய்தால் இரு நாடுகளின் நட்புறவில் மிகப்பெரிய தர்மசங்கடங்கள் ஏற்படலாமென தெரிவித்துள்ள ஹர்ஷ்வர்தன சிரிங்கா, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இணக்கத்துடனேயே, இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
1 comments :
கச்சதீவை வைத்து தமிழக கோமளிகள் கூத்தடிக்கிறார்கள்.
தமிழக கோமளிகளின் நயவஞ்சகத்தை இந்த வீடியோ விளக்குகிறது.
http://www.youtube.com/watch?v=RWbNNpqr6Zg&feature=player_embedded
Post a Comment