Sunday, August 4, 2013

ஒரு மிடர் கொத்தமல்லிகூட கொடுக்காத தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு வாக்குக் கேட்கலாம்....?

30 வருட யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகின்றன. என்றாலும், வடக்கிலுள்ள மக்களுக்காக கொத்தமல்லி மிடர் ஒன்றாவது வழங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கிலுள்ள பொதுமக்களின் வாக்கினைக் கேட்பதற்கு எந்தவொரு நியாயமான தேவையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா குறிப்பிடுகிறார்.

பேரந்துடுவை மருதங்கேணி பிரதேசத்தில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் மற்றும் பாலர் பாடசாலைகள் பலவற்றைத் திறந்து வைத்து, மருதங்கேணி ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திச் சங்க கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைச்சர், அப்பிரதேசத்தில் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதைத் தடைசெய்யுமாறு பாதுகாப்பு இராணுவத்தினருக்கு கட்டளையிட்டதுடன், சட்டரீதியாக மீன் பிடிப்பவர்களுக்கு சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்குமாறும் கூறினார்.

பிரதேசத்திற்குத் தேவையான மின்சாரத்தை 03 மாதங்களில் முழுமையாகப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ள அமைச்சர், அதற்குத் தேவையான பணஒதுக்கீட்டை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார சபைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல பிரதேசத்தில் நிலவுகின்ற காணிப் பிரச்சினை தொடர்பில் மிக விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாகவும், பொறுப்பான அதிகாரிகளிடம் அதுவிடயத்தில் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி மற்றும் கல்விசார் நிறுவனங்களுக்குரிய தேவைகளும் முழுமையாக ஏக காலத்தில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)

2 comments:

  1. உங்களிடம் உதவி பெற்று விட்டு , தமிழ் தேசியம் பேசி TNA க்கு வாக்கு போடும் எழிய இனமாக (விபசாரி மாதிரி) யாழ்ப்பாணிகள் உள்ளனர் என்பதை நீங்கள் இன்னும் உணர வில்லையா ?

    ReplyDelete
  2. உங்களிடம் உதவி பெற்று விட்டு , தமிழ் தேசியம் பேசி TNA க்கு வாக்கு போடும் எழிய இனமாக (விபசாரி மாதிரி) யாழ்ப்பாணிகள் உள்ளனர் என்பதை நீங்கள் இன்னும் உணர வில்லையா ?

    ReplyDelete