கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை சந்தேக நபர்களுள் ஒருவரான ரவிந்து குணவர்தனவிற்கு அடைக் கலம் அளித்தமைக்காக கைது செய்யப்பட்ட நபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என, புலனாய்வு பிரிவினர், கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் தெரிவித் துள்ளனர்.
உபாலி பண்டார எனப்படும் குறித்த நபர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். காலியில் இடம்பெற்ற கொலைச்சம்பவ மொன்றிற்காக காலி நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அத்துடன் ஹபராதுவை பிரதெசத்தில் நபர் ஒருவரை வெட்டிக்கொலை செய்தமைக்காக, வழக்கொன்றும், காலி நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் வேண்டுகோளை ஏற்ற கொழும்பு மேலதிக நீதவான் சஹாப்தீன், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த சந்தேக நபரை, மேலதிக விசாரணைக்காக காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும், உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment