படிப்படியாக வீடு காணி கையளிப்பும் படைக்குறைப்பும் நடைபெறும்-மகிந்த ஹத்துருசிங்க!
மக்களுடைய சொத்துக்களை புலிகள் பறித்து வைதிருந்த காலத்திலும், படையினர் வைத்திருந்த காலத்திலும் மக்கள் பட்ட துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளளேன் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம் பகுதியில் படையினர் நிலை கொண்டுள்ள விடுகள் காணிகளை கையளிக்கும் நிகழ்வு சுன்னாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றபோது பெற்றது அவர் இதனை தெரிவித்ததுடன் மக்களுடைய வீடுகள் காணிகள் இன்று மீள கையளிக்கப்படும் போது அவர்களுடைய மகிழ்ச்சியை புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் தென்னிலங்கையில் வாழும் எனது மகளோ மகனோ நல்ல சூழலில் சமாதானமாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியுமாக இருந்தால் வட மாகாணத்தில் வாழும் பிள்ளைகளும் இதே நிலையில் வாழ வேண்டும் அதனையே தாம் விரும்புவதாக குறிப்பிட்ட அவர் அதற்கான நிலமை தற்போது காணப்படுகிறது எனினும் இதனை சீர்குலைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே தமிழ் மக்களாகிய அனைவரும் விளிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
1995 ஆம் ஆண்டு நடைபெற்றயுத்தத்தின் பின்னர் நாம் பல நூற்றுக்கணக்கான வீடுகளையும் இடங்களையும் பிடித்து வைத்திருந்தோம் மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் பெறப்பட்ட நிம்மதியை மீண்டும் புலிகள் குழப்பாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்க்காக தற்போது புலிகள் இல்லை எனவே இதனை நாம் படிப்படியாக பொது மக்களிடம் கையளித்து வருகின்றோம் எனக்குறிப்பிட்டார்.
2009 ஆம்ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 29 ஆயிரத்தி நாநூறு படையினர் நிலை கொண்டு இருந்தார்கள் ஆனால் தற்போது 13 ஆயிரத்தி நூறு படையினரே நிலை கொண்டுள்ளார்கள் எனத தெரிவித்த இராணுவ கட்டளைத்தளபதி மேலும் குறிப்பிட்ட அளவு படையினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கப்படும் எனக்குறிப்பிட்டார்.
தமிழர், சிங்களவர், முஸ்லீம் என்ற இன மத வேறுபாடுகளைக் கடந்து ஒரேநாடு ஓரே மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என குறிப்பிட்டார்
0 comments :
Post a Comment