Thursday, August 29, 2013

எல்.ரீ.ரீ.யினரால் கடத்தி செல்லப்பட்டோரின் நிலை என்ன? சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்?

கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தின்போது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கருதப்படும் முப்படையினர், பொலிசார், பொதுமக்கள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் பேயுள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித் துள்ளது.

கடந்த 1972 ம் ஆண்டிலிருந்தே பொதுமக்களை கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 1981 ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு தரப்பினரையும் கடத்தும் செயலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். அன்றிலிருந்து புலிகள் அழிக்கப்படும் வரையும் ஆட்களை கடத்தும் செயல்களில் புலிகள் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

பெருந்தொகையானோரை அவர்கள் இவ்வாறு கடத்திச்சென்றுள்ள போதும், அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த 3 ஆயிரத்து 484 பேரும், ஆயிரத்து 181 பொலிசாரையும், ஆயிரத்து 175 பொதுமக்களையும் அவர்கள் கடத்திச்சென்றுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கில் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களையே அவர்கள் கடத்தியுள்ளனர்.

புலிகள் இயக்கத்திற்கு பலாத்காரமாக இணைத்துக்கொள்வதற்காக சுமார் 609 பேரை கடத்திச்சென்றுள்ளமையும் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வு துறை தெரிவிக்கிறது. இதற்கு மேலதிகமாக எல்லைக் கிராமங்களுக்குள் புகுந்து, மேலும் பலரையும் எல்.ரீ.ரீ.ஈ.யினர் கடத்திச்சென்றுள்ளனர். கடத்திக் கொண்டு சென்றவர்களை அடிமைகளாக நடத்தியது மாத்திரமன்றி சிலரை சித்திரவதைக் குள்ளாக்கி படுகொலை செய்துள்ளமையை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இநநிலையில் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் கோர தாண்டவம் குறித்து தொடர்ந்தும் பல உண்மைகள் வெளிவந்தமுள்ளன. இதேவேளை புலிகளின் இவ்வாறான செயல்கள் காரணமாக பொதுமக்களுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் ஏற்பட்ட இழப்புக்கள், அழிவுகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்டு கொள்ளவில்லை. ஏன் என்ற கேள்விக்கும் அவர்களிடம் இடமில்லை. எனினும் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவர்களின் நிலை என்னவானது என்பது இதுவரையும் கேள்விக்குரியாகவே உள்ளதாக பாதுகாப்பு பிரிவின் புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. impartial inquiry is needed.partiality never brings prosperity

    ReplyDelete