Monday, August 12, 2013

ஆழ்கடலுக்கு சென்ற படகிற்கு நடந்தது என்ன? பொலிஸில் முறைப்பாடு!

வாழைச்சேனையில் இருந்து ஆழ்கடலுக்கு தொழிலுக்காகச் சென்ற படகு ஒன்று கடந்த எட்டு நாட்களாக கரைக்கு வரவில்லை என்று படகு உரிமையாளர் மற்றும் உறவினர்களால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாழைச்சேனை ஹைறாத் பள்ளி வாசல் துறையடியில் இருந்து கடந்த சனிக்கிழமை (03) ஆழ் கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு இரண்டு தினங்களில் திரும்ப வேண்டியது நேற்று வரை திரும்பவில்லை என்றும் அவர்களுடனான கையடக்கத் தொலைபேசி தொடர்பு கடலுக்குச் சென்ற தினத்தில் இருந்து கிடைக்கவில்லை என்றும் படகு உரிமையாளரான வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ. எல். முபாறக் தெரிவித்தார்.

கடலுக்குச் சென்றவர்களில் பிறைந்துரைச் சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது நiர் (வயது 36), பிறைந்துறைச்சேனை தைக்கா வீதியைச் சேர்ந்த எச். எம். எம். ஹபீழ் (வயது 28), வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த முஸ்தபா லெப்பை முஸ்தபா (வயது 34) ஆகிய மூவருமே கடலுக்குச் சென்றவர்களாவர்.

இசசம்பவம் தொடர்பாக வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக முகாமையாளர் எஸ். எஸ். ஹெட்டிகே கருத்துத் தெரிவிக்கையில் தொலைந்துபோன படகு தொடர்பாக கடற்படை தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதுடன், ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்றுள்ள படகுகளுக்கும் தகவல்கள் தெரியப்படுத்தியுள்ள தாகவும், அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com