Wednesday, August 28, 2013

இராணுவத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையாளரிடம் மூக்குடைபட்ட முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன்!

நேற்று யாழ்பாணத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துள்ளார் தேர்தல் அணையாளர் மகிந்த தேசப்பிரிய. இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரை இராணுவ முகாம்களுக்கு முடக்குமாறும் அதற்கான அதிகாரங்கள் தேர்தல் ஆணையாளருக்கு உண்டு எனவும் தான் கொண்டு சென்றிருந்த சட்டப்புத்தகத்தில் பல்வேறு சரத்துக்களை தேர்தல் ஆணையாளருக்கு வாசித்து காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரனின் சட்ட விளக்கத்தை செவிமடுத்த தேர்தல் ஆணையாளர். விக்னேஸ்வரன் அவர்களே, நீங்கள் எவ்வளவோ பெரிய மனிதன் உங்களுக்கு நிறையச்சட்டம் தெரியும். ஆனால் தேர்தல் ஆணையளராகிய என்னால் ஜனாதிபதிக்கு உபதேசம் அல்லது முன்மொழிய மாத்திரமே சட்டம் இடம் கொடுத்திருக்கின்றது என்பது தெரியாதா? எனக் கேட்டபோது கையில் வைத்திருந்து சட்டப்புத்தகத்தை கவுட்டுக்குள் வைத்துக்கொண்டாராம் விக்கினேஸ்வரன்....

1 comments :

Anonymous ,  August 29, 2013 at 6:33 AM  

Hope he follows the foot steps of the TNA's racial hatred machine,because he's compelled to do that as he has surrendered himself to TNA.
Looking for a high status is an epidemic in our soiciety,for that they are ready lick the boots too

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com