Wednesday, August 28, 2013

நாட்டிற்குள் பாதகமான நுண்ணங்கிகள் பரவும் அபாயம் - தொ.ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு எச்சரிக்கை!

இரசாயன பசளைக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் உயி ரியல் பசளையினூடாக நாட்டிற்குள் பாதகமான நுண்ண ங்கிகள் பரவும் அபாயம் தலை தூக்கியுள்ளதாக தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு எச்சரித்துள்ளது.

உயிரியல் பசளை வடிவில் நாட்டிற்குள் எடுத்து வரப்படும் பாதகமான நுண்ணங்கிகள் குறித்து கருத்துத் தெரிவித் துள்ள கண்டி பிரதான ஆய்வு நிறுவன நுண்ணங்கி உயிரியல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் பேராசிரியர் காமினி செனவிரத்ன, பாதகமான நுண்ணங்கிகளினால் விவசாயத்துறையும் பெருந்தோட்டத்துறையும் படிப்படியாக அழிவடையும் எனவும் தரமற்ற உயிரியல் பசளைகள் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

விவசாயிகள் உயிரியல் பசளை பயன்படுத்துவதில் கூடுதல் ஈடுபாடு காட்டி வருகின்றனர். போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் இலங்கையில் உயிரியல் பசளைகள் உற்பத்தி செய்யப்படுவதோடு சில தனியார் துறையினர் அவற்றை இறக்குமதி செய்தும் வருகின்றனர். உயிரியல் பசளையினூடாக பயன்படுத்தப்படும் நுண்ணங்கிகள் எமது மண்ணுக்கு உகந்தவை என எதுவித உறுதியும் வழங்கப்படாத நிலையிலே அவை உபயோகிக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

இரசாயன பசளை போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பை விட பாதகமான நுண்ணங்கிகளினால் ஏற்படும் சேதம் அதிகமென்று குறிப்பிட்ட அவர், ஆரம்ப ஆய்வு நிறுவனத்தினூடாக உள்நாட்டுக்கு ஏற்ற நுண்ணங்கி உயிரியல் பசளை வகையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எட்டு வருடங்கள் ஆய்வு கூடங்களிலும் வெளியிலும் ஆய்வுக்குட்படுத்தி இந்த பசளை தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உயிரியல் பசளை பயன்படுத்துவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் பசளையின் தரத்தை உறுதி செய்த பின் அதனை விவசாயிகளுக்கு வழங்கும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com