ஊடகவியலாளரின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் பல இரகசியங்கள்!
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா ஸ்மாயிலின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் பல இரகசியங்கள் குறித்து புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
பம்பலப்பிட்டி திக்மென் வீதியில் ஊடகவியலாளர் ஒருவ ரின் வீட்டில் நேற்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்து மேற்கொண்ட சம்பவம் மற்றும் கொள்ளை கோஷ்டியி னரை மடக்கி பிடிப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின்றன.
பொலிஸ் அவசர தொடர்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக சந்தேக நபர் ஒருவர் கொல்லப் பட்டதுடன் மேலும் 4 சந்தேக நபர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பல பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இக்கொள்ளை கோஷ்டியில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த சண்டே லீடர் உடகவியலாளர் மந்தனா ஸ்மாயில் வழங்கிய வாக்க மூலங்கள் ஒன்றுக்கொன்ற முரண்பட்டதாக காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து இது ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என சில ஊடக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து இதன் பின்னணியில் சூழ்ச்சியொன்று காணப்படுவதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் படையினர் மேற்கொண்டதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சில சூழ்ச்சிகள் இருப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளதென சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவா மனித உரிமைகள் தாபனத்தின் பிரதிநிதி இலங்கைக்கு வருகை தந்துள்ள சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு சம்பவம் இடம்பெறுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதுகாப்ப தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் டொலர்களில் பிழைக்கும் என். ஜி. ஓ கும்பலின் சூழ்ச்சிகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளர்களின் கருத்துக்களின்படி தமது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் செயல்பட்ட விதமும் தனது கணவர் வந்த போது இடம்பெற்ற நிகழ்வும் சீர் செய்யப்படாத ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் காட்சி போன்று தெளிவற்ற நிலையில் இருப்பதாக உணரப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் அதே நேரம் சகல செயல்பாடுகள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment