நீங்கள் கட்டாயம் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வேண்டும்! - தயாசிரியிடம் வேண்டுகிறார் அக்பான் அபலிதீன்
‘பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் இருந்தபோதும், முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்த ஒருவர் தயாசிரி ஜயசேக்கர என்பவர். நீங்கள் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராவீர்கள் என்று சொன்னதும் முஸ்லிம்கள் மிக்க சந்தோசமடைந்தார்கள். தயாசிரி
ஜயசேக்கர வடமேல் மாகாண சபையின்முதலமைச்சராவதற்காக அவர்கள் முழு ஒத்துழைப்புத் தருவார்கள். நீங்கள் நிச்சயம் முதலமைச்சர் ஆவீர்கள். அன்றைக்கு நீங்கள் முஸ்லிம்களுக்காக ஏதேனும் செய்யவும். அவர்கள் படுகின்ற இன்னல்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும்’ எனவும் பொல்கஹவல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அக்பான் அபலிதீன் நேற்று முன்தினம் தயாசிரி ஜயசேக்கரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தயாசிரி ஜயசேக்கரவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஆளும் கட்சியின் குருணாகலை மாவட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடியபோதே வடமேல் மாகாண சபையின் முதலமைச்சரானதன் பின்னர் முஸ்லிம்களுக்கு ஒத்தாசை புரியுமாறு கூறியே இந்த வேண்டுகோள் அபிலிதீனால் விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுபொன அம்பசெவன ஓட்டலில் நேற்று முன்தினம் இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது. ‘வடமேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் முஸ்லிம்களுக்காக எந்தவொரு உதவியும் செய்யவில்லை. தேவையொன்றின் நிமித்தம் அவரைத் தேடி மாகாண சபைக்குச் சென்றவேளை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறி விரட்டிவிட்டார்கள். முஸ்லிம்களுக்காக மாகாணசபையின் கதவுகள் மூடப்பட்டன. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டிருந்தார்கள்’ என்றும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

0 comments :
Post a Comment