Friday, August 9, 2013

துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த வருகிறது புதிய சட்டம்!

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என்பதுடன் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளதால் தற்போது நாட்டின் பலபாகஙகளிலும் நடைபெறும் சிறுவர் துஷ்பிர யோக சம்பவங்கனை கட்டுப்படுத்தவும் தடுத்து நிறுத்துவதற்கு விசேட சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோக சம்பவத்திற்கு சாட்சியங்கள் வளங்கப்படுவது தொடர்பான சட்டங்களும் ஒரு நூற்றாண்டு பழமையானது எனவே இவற்றில் உத்தேச சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதடன் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே நாட்டின் சகல சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com