Saturday, August 24, 2013

தீக்குளித்த பிக்குவின் ஆத்ம சாந்தி வேண்டி பிக்குகள் இரத்ததானம்.

கௌதம புத்தர் ஞானம் பெற்ற தினமான கடந்த 24.05.13 அன்று இலங்கையின் வரலாற்று முக்கியஸ்துவம் வாய்ந்த தலதா மாளிகை முன்னே இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் , பௌத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்ற பல்வேறு பட்ட கோரிக்கைகளுடன் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட இந்தரத்தன தேரரின் மூன்று மாத நிறைவை ஒட்டி இன்று அம்பாறைப் பகுதியில் பௌத்த பிக்குகளின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பிக்குகளும் ஆயிரக்கணக்கான மக்களும் இரத்ததானம் செய்துள்ளனர்.

குறித்த இரத்தம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்து வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment