Tuesday, August 27, 2013

வளைகுடா நாடுகள் அனைத்திற்கும் ஒற்றை வீசாவின் மூலம், பயணிக்க முடியும்! புதிய வீசா முறை!

ஐரோப்பிய வலயத்தைப்போன்று, வளைகுடா நாடுகளு க்கும், ஒருங்கிணைந்த வீசா முறையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம், 2014 ம் ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பஹ்ரேன், குவைத், கட்டார், அரேபியா, மற்றும் ஐக்கிய அரேபிய குடியரசு ஆகிய வளைகுடா நாடுகள் அனைத்திற்கும் ஒற்றை வீசாவின் மூலம், பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விசாவை பெற்றுக்கொள்ள, போதுமான நிதி ஆதாரங்களும், ஆவணங்களும் வழங்கப்பட வேண்டுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒருங்கிணைந்த வீசா பெறும் முறை நடைமுறை க்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தற்போது நடைமுறையிலுள்ள ஒரு நாட்டிற்காக விசா அனுமதி முறை தடைசெய்யப்பட மாட்டாதென அறிவிக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பிய வலய நாடுகளில் ஒருங்கிணைந்த வீசா முறை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரகமாக முன்னெடுக்கப்படுகிறது. அதனடிப் படையில் ஐரோப்பிய வலயத்தை சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்குமாக சேர்த்து, ஒருங்கிணைந்த விசா பயன்படுத்தப்படுகிறது.

குறித்த நடைமுறையின் மூலம் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாதெனவும், பல நாடுகளுக்கான விஜயத்தின் போது இது எளிதான நடைமுறையாக காணப்படு மெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment