யாழ் அரியாலையில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் விடுவிப்பு
யாழ் அரியாலைப் பகுதியில் 512 ஆவது படைப்பிரின் பயன்பாட்டில் இருந்த 35 வீடுகள் மற்றும் ஆறு காணிகள் விடுவிப்பிப்பதற்கான உத்தியோக பூர்வ கடித்தினை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ககையளித்தார்.
1997 ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் மற்றும் வீடுகளே இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு அரியாலையில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
அரியாலைப்பகுதியில் இயங்கி வந்த 512 ஆவது படைப்பிரிவிற்கு வைத்தியசாலை வீதியில் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொதுமக்களின் வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment