இந்து முறைப்படி நல்லூரை கலக்கும் வெளிநாட்டவர்கள்!(படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வரும் வெளிநாட்டவர்கள் பலர் இந்து மதத்தவர்கள் செய்ய தயங்கும் கலாச்சார நடைமுறைகளை மிக நேர்த்தியாக செய்து வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததற்கு பின் வடக்கில் தினம் தினம் மாற்றங்கள் பல நடைபெறுகிறது இதன் ஒரு கட்டமாகா இம்முறை யாழ் நல்லூர் கந்தன் ஆலயவ வருடாந்த மஹோற்சவத்தில் வெளியாட்டு பெண்கள் பலர் சாறி உடுத்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருனாரத்ன உடபட பல பொலிசார் இந்து முறைப்படி வேட்டி உடுத்து கொண்டு ஆலயத்திற்கு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
அது மட்டுமல்லாது வெளிநாட்டில் வசிங்கும் பல குடும்பங்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் படையெடுத்துள்ளதுடன் இம்முறை பாடசாலை விடுமுறை காலத்தில் திருவிழா நடைபெறுவதால் அதிகமான தென்பகுதி சிங்கள, முஸ்லீம் சகோதரர்களும் ஆலயத்திற்கு தினம் தினம் வருவதை காணக்கூடியதாக உள்ளது.
0 comments :
Post a Comment