Wednesday, August 28, 2013

ஹொரவாப்பத்தானையில் இராணுவ அதிகாரியின் மனைவி இராணுவத்தைச் சேர்ந்த நால்வரால் பாலியல் வல்லுறவு....?

வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள தாயின் பிள்ளைகள் மூவரும் இராணுவச் சேவையில்....!

இராணுவத்தைச் சேர்ந்த உயர்பதவியில் உள்ள அதிகாரியொருவரின் மனைவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை குறித்து, சந்தேகத்தின்பேரில் இராணுவ வீரர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹொரவப்பத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேநபர்கள் சென்ற 8 ஆம் திகதி ஹொரவப்பத்தானை நேபடவெவவில் அமைந்துள்ள வீட்டில் வாழ்ந்துவந்த இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவிட்டு வீட்டிலிருந்து பெறுமதி வாய்ந்த பொருட்களையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.

பின்னர் சந்தேநபர்கள் நேற்று (27) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவரை ஹொரவப்பத்தானை லிந்தவெவ இலங்கை தேசிய பாதுகாப்பு இராணுவ பாசறையில் அவர்கள் சேவையில் ஈடுபட்டிருந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் மிகவும் மோசமான முறையில் ஒன்றிணைந்து இடைக்கிடையே இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்திருக்கின்றனர். இவ்வாறு துன்புறுத்தலுக்குள்ளான பெண்ணின் கணவன் இராணுவத்தில் மேஜர் ஒருவராக இருப்பதுடன், அவரின் பிள்ளைகள் மூவரும் இராணுவத்தின் உயர் பதவிகளில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ள பெண்ணின் வீட்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி அழைப்பொன்றை வைத்து பொலிஸார் இவ்விடயத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் மூவரும் இன்று (28) கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். வடமத்திய சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்த்தன, வடமத்திய உதவிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிரி ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பூரண கண்காணிப்பில் ஹொரவப்பத்தானை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கித்சிரி ஹேரத்தின் தலைமையின் கீழ் பொலிஸ் விசேட குழுவினரின் தேடல் வேட்டையில் இந்த இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுளள்னர்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com