Thursday, August 1, 2013

போலி நாணயத் தாள்கள்களை இனங்காண மத்திய வங்கி நடவடிக்கை!

கடந்த சில வாரங்களாக வட மாகாணத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளதுடன் வங்கி ஊழியர்களே போலி நாணயத் தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, வடக்கில் போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இந்தச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com