Thursday, August 22, 2013

பிள்ளையின் வருகையின் பின்னர் புஸ்வானமாக போகும் குற்றச்சாட்டுக்கள் - ஜகத் ஜயசூரிய!

ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு மேற்கொள்ளும் தனது விஜயத்தின் போது உண்மை நிலைமையை நேரில் கண்டறிவார் எனவும், அதன் பின்னர் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நம்புவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளைக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அச்சு மற்றும் இலத்திரனியல் சஊடகவியலாளர்களை பாதுகாப்பு சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது இலங்கைக்கு வருகை தரவுள்ள நவநீதம் பிள்ளையிடம் இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிப்பீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய, ஆம். நவநீதம்பிள்ளையின் விஜயத்தின் போது பல்வேறு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை மற்றும் அது தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், பாதுகாப்பு படைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிலுள்ள தேசிய புலனாய்வு துறையின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்த வித்தாரணவும் விளக்கமளிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

முப்படைகளின் தளபதிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது. அதேசமயம் நவநீதம்பிள்ளை கொழும்பில் மாத்திரம் தங்கியிருக்க மாட்டார். வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது உண்மை நிலைமையை அவர் நேரில் கண்டுகொள்வார். அவர் நேரில் கண்ட உண்மை விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவார். அதன் மூலம் அரசுக்கும், படையினருக்கும் எதிராக முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புவதாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய சுட்டிக்கட்டினார். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன் ஊடகவியலாளர் களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com