Friday, August 2, 2013

இலஞ்சம் பெற்ற நீதியரசருக்கும் வாக்குக் கேட்கும் நீதியரசரக்கும் வித்தியாசம் இல்லவே இல்லை! – கபில கமகே

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கவேண்டியுள்ளது எவ்வாறு எனின் அநியாயமே என்று சொல்லித்தான். ஏன் என்றால் இலஞ்சம் பெற்றார் எனக் கூறப்படும் நீதியரசர் தொடர்பில் இன்னும் நீதிமன்றத்தில் வழக்காடப்படுகிறது. அந்த நீதியரசர் இலஞ்சம் வாங்கினாரோ இல்லையோ அதுதொடர்பில் நீதிமன்ற வட்டாரத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை கணிப்பிட முடியாது. ஏன் என்றால், அந்த நிகழ்வானது சமூகத்தின் பேச்சுக்குட்பட்டு மக்களின் நம்பிக்கை சுக்கு நூறாகிப் போவதனால். இந்த நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்த அதேநேரம் நீதியரசர் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்களில் அதிருப்தியுற்றவர்களின் உள்ளங்களில் சந்தேகம் துளிர்விடத்தான் செய்யும். அந்த நீதியரசர் எனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருப்பதும் அடுத்த பகுதியினரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் என்ற சந்தேகம் அது. அதுதொடர்பில் யாரேனும் ஒருவர் நீதியரசருக்கு எதிராக மீள்விசாணைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தால் அதனால் எழுகின்ற கேள்வி விவாதத்திற்குரியதாக மாறும். அதுமட்டுமன்றி அது தொடர்பில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் சந்தேகத்திற்கு வழி வகுக்கும்.

இங்கு இலகுவான கோட்பாடு எதுவென்றால், இன்றைய நிலைமையில் நீதியரசரின் நிலைமை, அவர் பற்றி வெளிவருபவை, அவரது நடத்தை மாற்றம், முன்னர் அவர் வழங்கிய தீர்ப்புக்கள் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைகின்றன. நீதியரசர் ஒருவர் கிராமத்தில் உள்ள மரண உதவிச் சங்கங்களில் இணையாமல் இருப்பதற்குக் கூட காரணம் எதுவென்றால் அச்சங்கத்து உறுப்பினர் ஒருவரின் கண்களினால் அவ்வாறானதொரு தீர்ப்பைக் காணக்கூடாது என்பதற்காகவேயாகும்.

நீதியரசர் ஒருவர் ஓய்வு பெற்றாலும் கூட அவரது சேவையின் பொறுப்பு முடிவடைவதில்லை. நீதியரசர் ஒருவர் வழங்கிய தீர்ப்பு பற்றி மக்கள் அவர் ஓய்வுபெற்றதன் பின்னர்தான் சிந்திக்கத்தொடங்குவர். இலஞ்சம் பெற்று அல்லது தனது சுய விருப்பின் பேரிலோ, தலையீடுகளினால் அல்லது பிற வழிகளினால் நீதியரசர் ஒருவர் ஓய்வு பெற்றதன் பின்னர் ஏதேனும் ஒரு பக்கத்தினர் பக்கம் சாய்ந்து தீர்ப்பு வழங்கியிருந்தால் அந்த நீதியரசர் தனது சேவைக்காலத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியிருப்பர் என்று சந்தேகிக்க இடம் உண்டு. இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால் ஒரு நீதியரசர் தான் ஓய்வு பெற்ற பின்னரும் கூட தன்னிலையில் மாறக் கூடாது என்பது. அதுமட்டுமன்றி அதைப் பொதுமக்கள் கண்டு கொள்ளும்படி தான் செயற்படவும் வேண்டும். ........

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com