பொலிஸார் மீது, வாகனத்தை மோதச் செய்து கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்! பொலிஸார் படுகாயம் - கிளிநொச்சியில் சம்பவம்!
மாங்குளத்தில் மரக்கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு அவர்கள் பயணம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற் பட்ட பொலிஸார் மீது, கடத்தல்காரர்களின் வாகனத்தை மோதச்செய்து, சாரதி தப்பியோடியுள்ளார்.
மாங்குளத்தில் வைத்து டிப்பர் ரக வாகனத்தில் அனுமதிப் பத்திரமில்லாத தேக்கு மரங்களை ஏற்றி வந்த தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை தொடர்ந்து, அவ்வாகனத்தை பொலிஸார் வழிமறித்தனர்.
வாகனத்தை நிறுத்தாமல் சென்ற கடத்தல்காரர்களை பின்தொடர்ந்த பொலிஸார், மீண்டும் கிளிநொச்சியில் வைத்து வழிமறித்த போது, பொலிஸார் மீது வாகனத்தை மோதச்செய்து, சாரதி தப்பியோடியுள்ளார்.
சம்வத்தில் படுகாயமடைந்த பொலிஸார், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களை தேடி, பொலிஸார் வலைவிரித் துள்ளனர்.
0 comments :
Post a Comment