Friday, August 2, 2013

தற்காலிகமாக மூடப்பட்டது யாழ் பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்து, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பல்கலை தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகத்தில் சில கட்டடங்களுக்கும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில மோட்டார் சைக்கிள்களுக்கும் சேதம் ஏற்பட்டதனையடுத்து கடந்த 31 ஆம் திகதி மதியத்துடன் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com