Wednesday, August 14, 2013

சங்கரிக்கு தமிழிச்சியின் அன்பு மடல்!

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பது முது மொழி. இன்று இந்த முது மொழிக்கு மிகவும் பொருத்தமானவராக உள்ளார் சில்மிசச் செல்வன் சங்கரி. மடல் வரைவதில் எனக்கு நிகர் நான்தான் என நின்றவர் சங்கரி. பிரபாகரன் தொட்டு மஹிந்த , சம்பந்தன் வரை மடல்வரைந்து கொண்டிருந்த சங்கரியாருக்கு இப்போது மேலே சொன்ன ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்ற பழமொழிக்கு உவமையாக மக்கள் கடிதம் எழுதும் காலம் வந்துள்ளது. அந்த வரிசையில் கடிநொடி எனும் தமிழிச்சி கடிதம் ஒன்றை வரைந்துள்ளாள். அவளது கடிதம் எமது வாசகர்களுக்காக இணைக்கப்படுகின்றது.

ஆனந்த சங்கரி ஐயா அவர்களிற்கு கடிநொடியின் அன்பு மடல்.

உங்களிற்கு தமிழ் கூட்டமைப்பு சார்பாக வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கிடைத்ததும், எமக்கு ஒரு நிமிடம் தலை சுத்தி மயங்கிவிட்டோம் ஐயா. ஐயா நீங்கள் வருடம் 2005, 2006 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின், உலகம் சுற்றும் வாலிபனாகத் தான் இருந்தனிங்கள்.

அந்த காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தால் மற்ற நாடுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில், ஐயா நீங்கள் தமிழ் ஈழ போராட்டத்தையும் தமிழ் மக்களையும் கேவலப்படித்தி சிங்கள மக்களை சந்தோசப் படுத்தி பேசினதுகள் ஞாபகம் வருதோ ஐயா. அதிலை நீங்கள் சொன்ன வார்த்தைகள் நான் தமிழனாக பிறந்ததுக்கா கேவலப்படுகிறேன் என்றும் மற்றும் சிங்கள மக்கள், தமிழ் மக்களிற்கு எந்த துரோகமும் செய்யவில்லையென்று சிங்கள மக்கள் முன்னாடி சிங்கள அரசாங்கம் சொன்ன வேலையை சந்தோசமாக செய்து முடித்துக் கொடுத்தீங்கள் ஐயா.

அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த பணத்துக்காக தானே ஐயா? அல்லது உங்களிற்கும் கூட்டமைப்பு தலைவர் பதவி கிடைக்கவில்லையோ என்ற காரணத்துக்காகவா?

ஆனாலும் உங்களிற்கு வருடம் 2006 காலப்பகுதியில் சிங்கள அரசாங்கத்தின் முயற்சியால் சன்மானமாக UNESCO நிறுவினர்களிடம் இருந்து, நவம்பர் மாதம் 16ம் திகதி 2006 ஆம் வருடம் பிரஞ்சு தலை நகர் பாரிஸ்லில் $100,000 மற்றும் தமிழ் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததுக்கு சான்றிதழும் கிடைத்தது தானே ஐயா.

நீங்கள் இவ்வளவும் செய்த பிறகும் எந்த முகத்தை வைத்து தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கப்போறிங்கள் ஐயா?

எமது கேள்வி என்னவென்றாள் நீங்கள் ஏன் சிங்கள மக்களின் தொகுதியில் நின்று அவர்களின் ஆதரவோடு பாராளுமண்றம் செல்ல முயற்சியுங்கோ? உங்களிற்குத்தானே தமிழன் என்று சொல்ல கேவலப் படுகின்றீர்கள். ஏன் உங்களிற்கு தமிழர்களின் வாக்குக்கள்?

நான் நினைத்தேன் நீங்கள் மானமுள்ள சிங்கள பரம்பரையை சார்ந்தவர் என்று. ஐயா நீங்கள் பிறந்த இனத்துக்கோ அல்லது உங்களிற்கு பிடித்த இனத்துக்கோ விசுவாசமாக இருங்கள். நாம் அதை பிழையென்று சொல்லவில்லை.

எமக்கு தெரியும், ஐயா உங்களிற்கு கிளிநொச்சி உடும்பு இறைச்சி கறி என்றால் கொள்ளைப் பிரியம் என்று. அதுதான் இந்த வயதிலும் இறைச்சிக்காக வேட்பு மனு கொடுத்தீங்களோ?

ஆனால் தழிழ் மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் யாரை தேர்தலில் வெற்றியடைய வேனும் என்று முடிவேடுப்பார்கள். தமிழ் மக்கள் உங்களை தவிர்ந்த மற்ற கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றி அடைய செய்வார்கள்.

ஐயா உங்களிற்கு தமிழ் மக்களின் வாக்குத் தேவையென்றாள் நீங்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ் இனத்தை கேவலப்படுத்தியதற்கும் மற்றும் காட்டிக் கொடுத்ததுக்கும்.

ஐயா, எமக்கு ஒரு சந்தேகமும் இருக்குது. எப்படி உங்களை தமிழ் கூட்டமைப்பு, வேட்பாளராக தெரிவு செய்தது? இதிலை ஒரு பின்னனி இருக்குதோ ஐயா. உங்களின் அடியாள் பரந்தன் ராஐனின்(ENDLF) முயற்ச்சியால் இந்தியாவின் ஆதரவோடை, எமது தழிழ் கூட்டமைப்பை நிற்ப்பந்தித்தார்களா? அல்லது உங்களின் குடும்ப வாரிசுகளின்னுடாக கிடைத்த வெற்றியா?

ஐயா உங்களின் பதிலை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழச்சி (கடிநொடி).

நன்றி.

2 comments:

  1. ஆனந்த சங்கரி ஒட்டு மொத்த தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் , முதலில் டக்லஸ் , சித்தார்த்தன் , சுகு போன்றோர் தான் ஒட்டு மொத்த தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ReplyDelete
  2. முதல் பிரபாக்கு கொடி பிடிச்ச துரோகிகள் மன்னிப்பு கேடகட்டும், பிறகு சங்கரியாரை கேட்க சொல்லலாம். தமழனுக்கு அழிவு கொண்டு வந்தது கொலைகார, பயங்கரவாத பிரபா கும்பல் தான்.

    ReplyDelete