ஏற்கனவே அறிக்கையை தாயரித்துக் கொண்டே நவனீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார் - மனுஷ
இலங்கைக்கு ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை, இலங்கையின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக அவர் வரவில்லை ஏற்கனவே அறிக்கையை தாயரித்துக் கொண்டே அவர் இங்கு வந்துள்ளார் எனவும், அவர் தான் இங்கு வந்து நிலைமையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறுவது பொய் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் சூடான் நெருக்கடியின் பின்னர் பயங்கரவாத அமைப்புக்களில் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதற்குத் தேவையான விதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பித்த நவனீதம் பிள்ளையே இலங்கைக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமது திட்டத்தை வகுத்துக் கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment