எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாங்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
மேர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பொலிசார் இன்று காலை களத்திலிறங்கியதுடன் போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்க முற்பட்ட போது போராட்டக்காரர்கள் பொலிசார் மீது தாக்குதலில் ஈடுபட்டதுடன் அது சிறிது நேரத்திலேயே மிகப் பெரும் கலவரமாக மாறியது.
கலவரத்தை கட்டுப்படுத்த பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் பாரணமாக 170 மேற்பட்ட கலவரக்காரர்கள் உயிரிழந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதுடன் இதன் போது உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிந்த நிலையில் பாதையில் கிடக்கும் விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment