தாக்குதல்களை தாமே நடாத்திவிட்டு விசாரணைகளை நடாத்த கோருகின்றதா சிரியா?
நடப்பவை எல்லாற்றுக்கும் அமெரிக்காதான் காரண மாம்!!
சிரியாவின் தலைநகரான டமஸ்கஸில் இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நாவிற்கான சிரிய தூதுவர் மஸார் ஜபாரி, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பேங்கிமூனிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயண ஆயுத தாக்குதலில், 350 பேர் மரணமடைந்தனர். அத்துடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு, சிரிய கிளர்ச்சிப்படைகளே காரணமென, அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் தாக்குதலுக்கு சிரிய அரசாங்கமே காரணமென, குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி தெரிவிக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றதென, சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக, சிரிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சிப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களை அமெரிக்காவே ஊக்குவித்தது. இதனால் மோதல் உக்கிரமடைந்ததாக, சிரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணையொன்றை நடாத்துமாறு, சிரியா, ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment