இலங்கைக்கு வருகை தந்துள்ள இளவரசிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம்! (படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் மற்றும் தாய்லாந்து இளவரசிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்ததுடன், சமய வழிபாடுகளிலும் ஈடுபட் டனர். ஜப்பானிய இளவரசி தகமடோஹி சுகுகோ இன்று கண்டிக்கு சென்று மல்வத்தை அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்று கொண்டனர்.
அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதி சங்கைகுரிய உடுகம ஸ்ரீ புத்த ரகித தேரரை சந்தித்தார். இளவரசி சுகுகோ அங்கு கருத்து தெரிவிக்கையில், தனக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வாயப்பு கிடைத்தமை தனது வாழ்நாளில் பெற்ற பெரும் பாக்கியம் என அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேலும் விருத்தி செய்வதற்கு சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் ஜப்பானிய இளவரசி மல்வத்தை பீடத்தின் மகா நாயக்கர் அதி சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.
இதேநேரம் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சினின்டோ இன்று பொலன்நறுவை புனித பூமிக்கு விஜயம் செய்தார். கிரிவெஹர வட்டதாகே கல்விகாரை உட்பட பல் இடங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் பொலன்நறுவை நூதனசாலை பராக்கிரமபாகு மன்னனின் அரச பீடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
0 comments :
Post a Comment