Sunday, August 4, 2013

ஞாபக சத்தியை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழி

நினைவாற்றல் என்றால் என்ன? – ‘ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினைவாற்றல்‘ என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் இல்லை! மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் சில காரணங்களையும் கூறுகின்றார்கள். உதாரணமாக ‘‘ஒரு மாணவனை எடுத்துக் கொண்டால் நன்றாகப் பாடங்களை படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன. ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம் இல்லை.

பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும் ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பதுடன் தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான நினைவாற்றல்.

மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது என்பது உண்மையே நூறாண்டுகள் வாழும் 100 ஆண்டுகளில் ஒருவர் ஒவ்வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்பதுடன் அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தால்கூட தனது மூளையின் செயல்திறனில் 10இல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகின்றார்.

அதெல்லாம் சரி.. நினை வாற்றலை எப்படி வளர்ப்பது? ‘‘உடல் பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பேணிக் காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற்கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதுடன் நினைவாற்றலையும் மேம்படுத்தலாம்.

அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சி என்பதுடன் கணிதப் பாடத்தின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிகமிக ஏற்றது.

இதே போல் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில் இருக்கும் ‘நியூரான்கள்‘ விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும். எனவே குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும் என்பதுடன் இதன் போது சுரக்கும் ‘அட்ரினலின்‘ என்ற ஹார்மோன் குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com