Thursday, August 15, 2013

இரவில் பச்சை கலரில் ஒளிரும் முயல்களை உருவாக்கிய துருக்கி இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழக நிபுணர் குழு (காணொளி)

வீட்டின் செல்லப்பிராணிகளாக இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விரும்பப்படுவது முயல்கள்தான் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல அழகாக துள்ளி விளையாடும் முயல்கள் மனஅழுத்தத்தை குறைக்கும்என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்.

ஏற்கனவே வெள்ளை மற்றும் கருப்பு நிற முயல்குட்டிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது இருட்டில் அவை பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை உடையவைகளாக மாற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று ஒளிரும் தன்மையுடைய முயல்கள் பல நோய்களுக்கு மிக குறைந்த விலை மருந்தாக பயன்படும் எனவும் கருதப்படுவதுடன் இந்த சாதனையை துருக்கியில் உள்ள இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் உயிரியல் விஞ்ஞானிகள் முயலை கொண்டு மேற்கொண்ட ஆராச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஜெல்லி மீன் டி.என்.ஏவில் இருந்து ஒளிரும் புரோட்டீனை எடுத்து தாய் முயலின் கருமுட்டைக்குள் செலுத்தி கருவை உண்டாக்கினர் இந்த கரு வளர்ந்து வெள்ளை மற்றும் கருப்பு நிற குட்டிகளை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈன்றது.

அவ்வாறு ஈன்ற அக்குட்டிகள் இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றது இதற்கு ஜெல்லி மீனின் டி.என்.ஏ. செலுத்தப்பட்டதுதான் காரணம் என அதனை உருவாக்கிய இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment